உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி பொறியாளர் கைது

ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி பொறியாளர் கைது

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி, 4வது மண்டல இளம் பொறியாளராக உள்ளவர் சுரேஷ்குமார், 39. மாநகராட்சியில் ரோடு பணி ஒப்பந்ததாரராக இருப்பவர் கந்தசாமி. இவர் 1.59 கோடி ரூபாய் மதிப்பில் மாநகராட்சி பகுதியில் ரோடு அமைக்க 'டெண்டர்' எடுத்தார். பணிகள் முடிந்ததால், 'பில்' தொகையை வழங்க, ஒப்புதல் தர பொறியாளர் சுரேஷ்குமாரை அணுகினார்.இதற்காக, 2 லட்சம் ரூபாய் லஞ்சமாக சுரேஷ்குமார் கேட்டார். அதில் 1 லட்சம் ரூபாயை கந்தசாமி கொடுத்து விட்டார். மேலும் 1 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என சுரேஷ்குமார் வலியுறுத்தினார்.திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய 1 லட்சம் ரூபாய் பணத்தை, நேற்று மாலை, ராயபுரத்தில் உள்ள அலுவலகத்தில் கந்தசாமி, சுரேஷ்குமாரிடம் கொடுத்தார்.மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சுரேஷ்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி