உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தம்பதி பேட்டி: பொறுப்புணர்வை புரிய வைத்தோம்

தம்பதி பேட்டி: பொறுப்புணர்வை புரிய வைத்தோம்

திருப்பூர், காலேஜ் ரோட்டில் வசிப்பவர் ஜனார்த்தனன்; ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவன உரிமையாளர். இவரது மனைவி சுமதி; துணிக்கடை உரிமையாளர். மூத்த மகள் கிருபா, விஷூவல் கம்யூனிகேசன், இளைய மகள் தீர்த்தா, ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங்படிக்கின்றனர்.ஜனார்த்தனன் கூறியதாவது:ஈவென்ட் மேேனஜ்மென்ட் தொழில் என்பதால் மாதத்தின் பெரும்பாலான நாட்கள் வெளியூர் பயணம் செல்கிறேன். சுமதிக்கு காலை முதல் மாலை வரை கடையில் வியாபார 'பிசி'. இருப்பினும் இரு மகள்களுடனும் உரிய வகையில் நேரம் செலவிட்டு, அவர்கள் தேவைகள், எண்ணங்கள் குறித்து கேட்டறிந்து நடந்து கொள்கிறோம்.'உங்கள் துறையில் நீங்கள் ஜெயிக்க வேண்டும். வெற்றி பெற்றால் உங்கள் எண்ணப்படி வாழ்க்கை அமையும்; வெற்றியை இழந்து விட்டால் அடுத்தவர் எண்ணப்படி தான் வாழ வேண்டிய நிலை ஏற்படும்' என்று நாங்கள் அவர்களிடம் கூறுகிறோம். அதற்கேற்ப அவர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்கின்றனர்.வளர்ந்து விட்ட குழந்தைகள் என்பதால் அவர்களுக்கான மரியாதையை நாம் தர வேண்டும். எந்த நிலையிலும் அவர்களை அவமானப்படுத்தக் கூடாது.குழந்தைகளின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு பெற்றோர் அடித்தளமாக இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ