உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பணி பாதுகாப்பு வழங்க கோரி கோர்ட் ஊழியர் ஆர்ப்பாட்டம்

பணி பாதுகாப்பு வழங்க கோரி கோர்ட் ஊழியர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்; திருச்சி, எடமலைப்பட்டியைச் சேர்ந்தவர் அருண் மாரிமுத்து, 35. திருச்சி ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட் ஊழியர். பணிச்சுமையால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தமிழகம் முழுவதும் கோர்ட் ஊழியர்கள் சங்கம் சார்பில், கோர்ட் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பணிப் பாதுகாப்பு வழங்க கோரி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், அவிநாசி, தாராபுரம், காங்கயம் கோர்ட் வாயில்களில் கோர்ட் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில், பங்கேற்ற ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை