குளத்தில் கொட்டப்படும் கழிவுகளால் பாதிப்பு
உடுமலை;பெரிய குளம் கரை பராமரிப்பு இல்லாமல், புதர் மண்டி காணப்படுவதோடு, குப்பை கொட்டும் மையமாக மாறியுள்ளது.உடுமலை ஏழு குளம் பாசனத்திற்குட்பட்ட பெரிய குளம், 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்குளத்தின் கரைகள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில், முட்செடிகள், புதர்கள் முளைத்து, புதர் மண்டி காணப்படுகிறது.பல இடங்களில் கரைகள், குளக்கரையில் அமைந்துள்ள ரோடு சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும், தளி ரோடு, வாளவாடி பிரிவு, வாளவாடி உள்ளிட்ட பகுதிகளில், குளத்தின் உபரி நீர் வெளியேறும் பகுதிகளில், குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு, நீர் நிலை மாசுபடுத்தப்பட்டு வருகிறது.எனவே, குளத்தின் கரையை சீரமைக்கவும், கழிவுகளை கொட்டுவதை தடுக்கவும், நீர் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.