உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆபத்தான பஸ் ஸ்டாப் நிழற்கூரை

ஆபத்தான பஸ் ஸ்டாப் நிழற்கூரை

உடுமலை: உடுமலை தளி ரோடு எலையமுத்துார் பிரிவிலுள்ள பஸ் ஸ்டாப் நிழற்கூரை பராமரிப்பு இன்றி, ஆபத்தான முறையில் உள்ளது.உடுமலை அரசு கல்லுாரி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோட்டாட்சியர் அலுவலகம், போக்குவரத்து துறை அலுவலகம், அரசு பள்ளி, கல்லுாரி மாணவர் விடுதிகள், தனியார் பள்ளி மற்றும் தொழிற்பேட்டை, வணிக நிறுவனங்கள் உடுமலை- எலையமுத்துார் ரோட்டில் அமைந்துள்ளன.பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் பஸ் ஏறுவதற்கு, தளி ரோட்டில் எலையமுத்துார் பிரிவு பகுதியில் பஸ் ஸ்டாப் உள்ளது. இங்கு, மக்கள் பயன்பாட்டிற்காக, 15 ஆண்டுக்கு முன், பஸ் ஸ்டாப் நிழற்கூரை அமைக்கப்பட்டது.இதனை முறையாக பராமரிக்காததால், கட்டடம் மற்றும் பயணியர் இருக்கைகள் சிதிலமடைந்தும், வழித்தடத்திலுள்ள பாலம் உடைந்தும், ஆபத்தான நிலையில் உள்ளது.மேலும், பஸ் ஸ்டாப் நிழற்கூரை பகுதி முழுவதும், முட்செடிகள், மரங்கள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், பிரதான ரோட்டில், மழை, வெயிலில் பஸ்சிக்காக காத்திருக்கும் அவல நிலை உள்ளது.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள நிலையில், இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.எனவே, இதனை அகற்றி விட்டு, புதிதாக ரோட்டோரத்தில், பாதுகாப்பான முறையில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை