உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண் கடத்தல் தடுத்த இளைஞர்களுக்கு கொலை மிரட்டல்

மண் கடத்தல் தடுத்த இளைஞர்களுக்கு கொலை மிரட்டல்

திருப்பூர்;மண் திருட்டை தடுத்ததால், கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை அருகே, நெடுஞ்சாலைத்துறை கொட்டி வைத்திருந்த மண்ணை, லாரியில் வந்த சிலர் திருடி செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. வேர்கள் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், 5வது முறையாக மண் அள்ளிய போது டூவீலர்களை லாரி முன் நிறுத்தி, கேள்வி எழுப்பினர்.ஆத்திரமடைந்த லாரி டிரைவர் உள்ளிட்டோர், டூ வீலர்களை இடித்து, தன்னார்வ அமைப்பினரையும் தாக்கியுள்ளனர்.மொபைல் போனை பறித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக, பாதிக்கப்பட்ட இளைஞர்கள், திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்துள்ளனர்.நெடுஞ்சாலைத்துறையினர் தகவல் அறிந்து வந்ததும், மண்ணை கொட்டிவிட்டு, லாரியுடன் தப்பிச்சென்றனர். கொலை மிரட்டல் விடுத்தால், இளைஞர்கள் வடக்கு போலீசில் புகார் அளித்துள்ளனர்.போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து வந்து, விசாரித்தனர். அனுமதி இல்லாமல் மண் அள்ளி சென்றது; யாருக்கு மண் விற்கப்பட்டது என்று விசாரித்தனர். அப்போது, மண் கடத்தலில் ஈடுபட்டவருக்கு ஆதரவாக, ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த சிலர், போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் வேர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சந்தீப் கூறுகையில், ''திருப்பூரில் தன்னார்வலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. மண் கடத்தலை தட்டிக்கேட்டதால், கொலை மிரட்டல் விடுத்தனர்; இதுதொடர்பாக, வடக்கு போலீசில் புகார் அளித்துள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை