உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நல வாரியத்தில் ஆதரவற்ற பெண்கள் பதிவு செய்து கொள்ள அழைப்பு

நல வாரியத்தில் ஆதரவற்ற பெண்கள் பதிவு செய்து கொள்ள அழைப்பு

உடுமலை: ஆதரவற்ற பெண்கள், நல வாரியத்தில் பதிவு செய்து கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், அவர்கள் வாழ்வாதாரத்திற்கான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட பணிகள் மேற்கொள்ள, தமிழக அரசு சார்பில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நல வாரியம் அமைத்துள்ளது.ஆதரவற்றோர் நல வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து, https://tnsocialwelfare.tn.gov.inஎன்ற இணைய தள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.மேலும், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நல வாரியத்திற்கென தனியே உருவாக்கப்பட்டுள்ள www.tnwidowwelfareboard.tn.gov.inஎன்ற இணைய தள முகவரி வாயிலாக, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை, எளிய கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள், தங்களது விபரங்களை இணையதள முகவரியில் பதிவு செய்து, நல வாரிய உறுப்பினர் ஆகலாம்.இதில், உறுப்பினராக பதிவு செய்பவர்களுக்கு, சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஓய்வூதியம், தற்காலிக தங்கும் இடம், திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் சுயதொழில் செய்ய மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளின் கீழ் பயன்பெறலாம், என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ