விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நன்கொடை கேட்டு தகராறு
அனுப்பர்பாளையம் : விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நன்கொடை கேட்டு, ஓட்டலை சேதப்படுத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், போயம்பாளையம் - கணபதி நகர், 4வது வீதியை சேர்ந்தவர் கணபதி, 53. ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த, 2ம் இவரது ஓட்டலுக்கு வந்த அகில பாரத ஹிந்து மகாசபையை சேர்ந்த ஏழு பேர் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, 3 ஆயிரம் ரூபாய் நன்கொடை கேட்டனர்.அதற்கு கணபதி, 'ஏற்கனவே, 500 ரூபாய் கொடுத்துள்ளேன்,' என்றார். ஆனால், ஏழு பேர் கொண்ட கும்பல் ஓட்டலுக்கு முன் தள்ளு வண்டியில் வைத்திருந்த உணவு மற்றும் பாத்திரங்களை சேதப்படுத்தி மின் விளக்குகளை உடைத்து தப்பினார்.இது குறித்து, அனுப்பர்பாளையம் போலீசில், அகில பாரத ஹிந்து மகா சபையை அமைப்பை சேர்ந்த சதீஷ், முகிலன், பாலாஜி, ராசுக்குட்டி, அருண், சுரேஷ், அஸ்வத், ஆகிய ஏழு பேர் மீது கணபதி புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், ராசுக்குட்டி, 25, என்பவரை கைது செய்து, தலைமறைவாக, ஆறு பேரை தேடி வருகின்றனர்.