தி.மு.க., பொதுக்கூட்டம்
அனுப்பர்பாளையம்; திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மத்திய அரசை கண்டித்து கண்டன பொது கூட்டம் திருப்பூர், பி.என்., ரோடு பிச்சம்பாளையத்தில் நடைபெற்றது.திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். வடக்கு மாநகர பொறுப்பாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர்கள் சாவல்பூண்டி சுந்தரேசன், குடியாத்தம் அன்பு பேசினர். தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, பகுதி செயலாளர்கள் ராமதாஸ், ஜோதி, மண்டல தலைவர் கோவிந்தராஜ், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், வேலம்மாள், பாலு உட்பட பலர் பங்கேற்றனர்.