உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வைட்டமின் - ஏ திரவம்  குழந்தைக்கு வழங்க தவறாதீர்!

வைட்டமின் - ஏ திரவம்  குழந்தைக்கு வழங்க தவறாதீர்!

திருப்பூர்; ஆறு மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின் - ஏ திரவம் வழங்க தவறாதீர்.இது குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், வைட்டமின் - ஏ திரவம் வழங்கும் முகாம், வரும், 17ல் துவங்கி, 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. 6 மாதம் முதல் 5 வயது வரையிலான, 1.6 லட்சம் குழந்தைகளுக்கு திரவம் வழங்கப்பட உள்ளது. வைட்டமின் - ஏ சத்து, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உடல், மன வளர்ச்சி மற்றும் புத்தி கூர்மைக்கு மிகவும் இன்றியமையாதது. மேலும் கண் பார்வையில் குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது.இந்த திரவத்தால் எவ்விதமான பக்க விளைவு களும் ஏற்படாது. அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களிலும் வழங்கப்படும். 6 முதல் 11 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு 1 மில்லி; 12 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு 2 மில்லி அளவும் வழங்கப்படும். இதற்காக, தலா 100 மில்லி கொண்ட 8,578 வைட்டமின் - ஏ திரவம் குப்பிகள் பெறப்பட்டுள்ளது. வாய்ப்பை பன்படுத்தி பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு 'வைட்டமின் - ஏ' திரவம் கொடுத்து பயன்பெற வேண்டும்.இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை