மேலும் செய்திகள்
நிட்ஷோ இன்று நிறைவு
11-Aug-2024
''பார்த்தீனியம் விதைகள் பல்லாண்டுகள் கழித்தும் முளைக்கும் தன்மை கொண்டவை. பார்த்தீனியம் விஷச்செடிகளை, இயற்கை முறையில் கட்டுப்படுத்த முடியும்'' என்கின்றனர் வேளாண் விஞ்ஞானிகள்.பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், பார்த்தீனியம் விஷச் செடியை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் முன்னிலையில், வேளாண் விஞ்ஞானிகள் துக்கையண்ணன், கலையரசன், சுமித்ரா ஆகியோர் பயிற்சி வழங்கினர்.விவசாயிகளுக்கு, விஞ்ஞானிகள் வழங்கிய ஆலோசனைகள்:நன்கு வளர்ந்த பார்த்தீனியம் செடி, ஒரு பருவத்தில், 20 ஆயிரம் முதல், 50 ஆயிரம் விதைகளை உருவாக்கும் தன்மை கொண்டது. பல ஆண்டு களுக்கு விதை உறக்கம் கொண்டு, பல ஆண்டுகள் கழித்து மீண்டும் முளைக்கும் தன்மை கொண்டது.இச்செடியின் இலை, பூ மற்றும் விதைகள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் 'அலர்ஜி' எனப்படும் தோல் நோயை ஏற்படுத்தும். இச்செடியை முற்றிலும் அழிக்க வேண்டியது அவசியம்.இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்த, இச்செடி பூக்கும் முன், கையால் பிடுங்கி அழிக்கலாம். அல்லது இயந்திரம் வாயிலாக உழுது அழிக்கலாம். வீடுகளில் பயன்படுத்தப்படும் உப்பு கரைசலை தெளிப்பதன் வாயிலாகவும் கட்டுப்படுத்த முடியும்.மேலும், பரிந்துரைக்கப்பட்ட 'கிளைப்போசேட்' என்ற களைக்கொல்லியை, பயிர் சாகுபடி இல்லாத சமயத்தில் தெளித்து கட்டுப் படுத்தலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
11-Aug-2024