வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஏதாவது செஞ்சு கால் ஊனலாமான்னு பாத்தா பன், க்ரீம்னு வந்து சொதப்பிட்டு போறாங்களே. பாவம். கோவை தொழிலதிபர்கள்.
கனவுகளைக் காண்பது மட்டுமல்ல; அவற்றைச் செயல்வடிவமாகவும் உடனடியாக மாற்றிக்காட்ட முயற்சிக்கிறது, இன்றைய இளம் தலைமுறை; திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் இளம் தலைமுறையினரின் அணிவகுப்பு, நவீனத் தொழில்நுட்பங்களைச் சாத்தியமாக்குகிறது. மதிப்புக்கூட்டு ஆடை உற்பத்திதான் அன்னியச்செலாவணியை மேம்படுத்துவதற்கான அற்புத வழி என்பதால், தங்கள் எண்ணத்தையே மந்திரக்கோலாக மாற்றி, தொழில் வித்தகம் என்ற மாயாஜாலத்தை இளம் தொழில்முனைவோர் நடத்தி காட்டுகின்றனர். தங்கள் கண் முன் விரிந்த கனவுகளைச் செயல் திட்டமாக்கிய இளம் தொழில்முனைவோர், நம் நாளிதழுடன் பகிர்ந்த கருத்துகள்:பாலியஸ்டர் பேப்ரிக்பலமான வரவேற்பு1. ஜெய்விஷ்ணு, 'பேப்ரிக்' விற்பனையாளர், திருப்பூர் :கடந்த, 15 ஆண்டுகளாக, பருத்தி மற்றும் ஓ.இ., 'பேப்ரிக்'கள் விற்பனை செய்து வருகிறோம்; தற்போது, பாலியஸ்டர் 'பேப்ரிக்' விற்பனையும் துவங்கியுள்ளது. நாங்கள், 30 கலர் வரை, துணிகளை வழங்கி வருகிறோம். ஒவ்வொரு ரோலையும் சரிபார்த்த பிறகே வாடிக்கையாளருக்கு வழங்கி வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, இருப்பு வைத்து, 'பாலியஸ்டர்' பேப்ரிக்குகளை, 18 ரகங்களில் வழங்கி வருகிறோம்; விரைவில், 25 ரகங்கள் விற்க தயாராகி வருகிறோம். முன்பு இருந்ததை காட்டிலும், பாலியஸ்டர் பேப்ரிக் ரகங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. *ஆடை உற்பத்திக்குஆயத்தமாக துணிகள்2. விஷ்ணுவர்தன், நிர்வாக இயக்குனர், சாய ஆலை, குன்னாங்கல்பாளையம்:'டென்சில்' பேப்ரிக், 'நிட்டட் டெர்ரி', வெள்ளூர் பேப்ரிக், 'போலார் பிலீஸ்' மற்றும் 'டெர்ரி டவல்' ரகங்களை வழங்கி வருகிறோம். 'பேப்ரிக்' ஆர்டர் கொடுத்தால், தயாரித்து கொடுக்கிறோம். நவீன மெஷின்களை இறக்குமதி செய்து, 'ஸ்பெஷல்' பேப்ரிக்குகளை, வழங்கி வருகிறாம். காட்டன், பாலியஸ்டர் மற்றும் காட்டன் பாலியஸ்டர் பேப்ரிக்களை உற்பத்தி செய்து, நேர்த்தியாக சாயமிட்டு வழங்கி வருகிறோம். வாடிக்கையாளருக்கு, 'ரெடி டூ கட்' என்ற வகையில், நுால் வாங்கி, துணியாக மாற்றி, சாயமிட்டு, ஆடை உற்பத்திக்கு தயார்நிலையில் துணியை வழங்கி வருகிறோம்.தொழில்நுட்ப மேம்பாடுவளர்ச்சித் திறவுகோல்3 கதிரேசன், நிர்வாக இயக்குனர், டிசைன் மற்றும் எலாஸ்டிக் நிறுவனம், தோட்டத்துப்பாளையம்:டிசைன் பணிகளை, 1999 முதல், பிரின்டர் லேபிள் தயாரிப்புடன் துவக்கினோம். 'மல்டி கலர் ஸ்டிக்கர், பார்கோடு ஸ்டிக்கர் என, திருப்பூருக்கு அசசரீஸ் கடைகளுக்கான ரெடிமேடு ஸ்டிக்கர்களை தயாரித்து கொடுக்கிறோம். எலாஸ்டிக் உற்பத்தியை, 2010ல் இன்னர் எலாஸ்டிக் தயாரித்து கொடுக்கிறோம். கலர் மற்றும் பிளைன், 'பேன்ஸி ஸ்பிரில்', பெயருடன் கூடிய எலாஸ்டிக், பேன்டீஸ் எலாஸ்டிக் என, எலாஸ்டிக் ரகங்களை, தயாரித்து கொடுக்கிறோம். தொழில் மேம்பாட்டை பொறுத்தவரை முயற்சியை பொறுத்தே, வளர்ச்சி இருக்கும்.மெஷின் தயாரிப்பு பணிதொழில்துறையினர் பார்வை4. கிருஷ்ணமூர்த்தி, வெளிநாட்டு நிட்டிங் மெஷினுக்கான இந்திய முகவர், திருப்பூர்:புதிய நிட்டிங் யூனிட்கள் துவங்கும் போது, 'பையுவான்' மெஷின்கள் அதிகம் வாங்கி பயன்படுத்துகின்றனர். மெஷின் விற்பனையுடன், தொடர்சேவையும் அளிக்கிறோம். புதிதாக நிட்டிங் மெஷின் வாங்க வங்கி கடனுதவியும் அளித்து வருகிறோம். மெஷின் தயாரித்து குறித்து தெரிந்துகொள்ள, ஆண்டுதோறும், 10 நபர்களை சீனா அழைத்துச்சென்று, நேரில் பார்க்க வசதி செய்கிறோம். 'பையுவான்' நிட்டிங் மெஷின்கள், மற்ற மெஷின்களை காட்டிலும், மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. நிட்டிங் மெஷின் இயக்கும் பணியில் இருந்ததால், அடிப்படை கஷ்டங்களை உணர்ந்து, அதற்கு ஏற்ப புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய நிட்டிங் இயந்திரங்களை வழங்கி வருகிறோம். *விறகு எரிப்பது எதற்கு?ஹீட்டர் சிறப்பாக இருக்கு!5) ராஜகுரு, நிர்வாக இயக்குனர், இன்டஸ்ட்ரியல் ஹீட்டர் தயாரிப்பு நிறுவனம், திருப்பூர்:திருப்பூர் பனியன் தொழிலில், சாய ஆலைகள் உட்பட, பல்வேறு தொழில் பிரிவுகளில், 'ஸ்டீம்' பயன்படுத்தப்படுகிறது. அதற்காக, அதிக விறகு கொண்டு எரிக்கப்படுகிறது; சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. இந்நிலையை மாற்ற, மின்சாரத்தில் இயங்கும் ஹீட்டர் வசதியை நாங்கள் செய்து கொடுக்கிறோம்.எவ்வித கெடுதலும் ஏற்படாது என்பதால், குறைந்த விலையில் ஹீட்டர் வாங்கி பயன்படுத்த அனைவரும் விரும்புகின்றனர். விலை குறைவு என்று பார்க்காமல், தரமான ஹீட்டர்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். திருப்பூர் பகுதி நிறுவனங்களுக்கு இத்தகைய ஹீட்டர் வசதியை செய்து கொடுத்து வருகிறோம். ஏ.ஐ., தொழில்நுட்பம்என்றும் ஏற்றம் தரும்6. தீபக், முதன்மை செயல் அலுவலர், டிஜிட்டல் பிரின்டிங் நிறுவனம்:கோவையில் டிஜிட்டல் மெஷின் தயாரித்து வருகிறோம்; திருப்பூரில், பிரின்டிங் நிறுவனம் இயக்கி வருகிறோம். டிஜிட்டல் பிரின்டிங் மூலம், 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தில், அதிக கலர்களில் துல்லியமாக டிசைன் உருவாக்க முடிகிறது. கையில் வரைந்து, ஆர்டர் ஒர்க் பிரின்ட் செய்ய வேண்டிய நிலை மாறிவிட்டது.டிசைன் செய்வது 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தால், 10 நிமிடங்களில் சாத்தியமாகிறது; ஸ்கிரீனில் தயாரிப்பது சிரமம். செலவு குறைவது மட்டுமல்ல; பசுமை சார் உற்பத்திக்கு வழிகாட்டும் வகையில், கழிவுகள் வெளியேற்றுவது தடுக்கப்பட்டுள்ளது. 'ஸ்கிரீன்' தயாரிக்கவும், சுத்தம் செய்யவும் தண்ணீர் அதிகம் செலவாகும்; டிஜிட்டல் பிரின்டிங்கில், மிகக்குறைவாக பயன்படுத்தப்படும். குறைந்தபட்ச ஆடைகளுக்கும் பிரின்ட் செய்யும் வசதி, பெரிய ஆறுதலாக மாறியிருக்கிறது. ஸ்கிரீன் பிரின்டிங் மெஷின்களையும், டிஜிட்டல் மெஷின்களாக மாற்றி கொடுத்தும் வருகிறோம். ***கோவையில் டிஜிட்டல் மெஷின் தயாரித்து வருகிறோம்; திருப்பூரில், பிரின்டிங் நிறுவனம் இயக்கி வருகிறோம். டிஜிட்டல் பிரின்டிங் மூலம், 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தில், அதிக கலர்களில் துல்லியமாக டிசைன் உருவாக்க முடிகிறது. கையில் வரைந்து, ஆர்டர் ஒர்க் பிரின்ட் செய்ய வேண்டிய நிலை மாறிவிட்டது.டிசைன் செய்வது 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தால், 10 நிமிடங்களில் சாத்தியமாகிறது; ஸ்கிரீனில் தயாரிப்பது சிரமம். செலவு குறைவது மட்டுமல்ல; பசுமை சார் உற்பத்திக்கு வழிகாட்டும் வகையில், கழிவுகள் வெளியேற்றுவது தடுக்கப்பட்டுள்ளது.'ஸ்கிரீன்' தயாரிக்கவும், சுத்தம்செய்யவும் தண்ணீர் அதிகம் செலவாகும்; டிஜிட்டல் பிரின்டிங்கில், மிகக்குறைவாக பயன்படுத்தப்படும்.
ஏதாவது செஞ்சு கால் ஊனலாமான்னு பாத்தா பன், க்ரீம்னு வந்து சொதப்பிட்டு போறாங்களே. பாவம். கோவை தொழிலதிபர்கள்.