உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மினி பஸ் வராததால் மக்களுக்கு சிரமம்

மினி பஸ் வராததால் மக்களுக்கு சிரமம்

திருப்பூர்;மினிபஸ்கள் நகர் பகுதிகளுக்குள் வராததால், பொதுமக்கள் நீண்ட துாரம் நடந்து செல்ல வேண்டியுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.திருப்பூர், மங்கலம் ரோடு பகுதியில், மினி பஸ்கள் மெயின் ரோடு வழியாக சென்று வருவதால், தொலைவில் உள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தொழிலாளர்கள், மாணவ, மாணவியர், உரிய நேரத்துக்கு சென்றுவர முடியாமல், நீண்ட துாரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. மீண்டும், குடியிருப்பு பகுதிகள் வழியாக மினி பஸ்கள் இயக்கப்பட வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறியதாவது:புவனேஸ்வரி நகர், தன்வர்ஷினி நகர், ஜெயம் கார்டன் எஸ்.ஆர்., நகர் வழியாக, மினி பஸ்கள் இயக்கப்பட்டன. பொதுமக்கள் அதிகம் பயனடைந்தனர். தற்போது, ேஷர் ஆட்டோக்களுக்கு போட்டியாக, மினிப ஸ் இப்பகுதிகளுக்கு வராமல், மெயின் ரோட்டிலேயே இயக்கப்படுகின்றன. போக்குவரத்து கழக அதிகாரிகள் தலையிட்டு விவாரித்து, குடியிருப்பு பகுதிகள் வழியாக மினி பஸ்கள் இயங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !