உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழில்முனைவோர் :ஏ டூ இஸட் அறியுங்கள்...ஏற்றத்துடன் நடைபயிலுங்கள்

தொழில்முனைவோர் :ஏ டூ இஸட் அறியுங்கள்...ஏற்றத்துடன் நடைபயிலுங்கள்

முகமது ஷபி, சிங்கர் டெய்லர் கான்ட்ராக்டர், டிமாண்ட் வீதி:தந்தை ரஹீம், டிமாண்ட் வீதியில் தையல் கடை நடத்திவந்தார். படிக்கும் போதே டெய்லரிங் கற்றுக்கொண்டேன். படித்து முடித்ததும், பனியன் நிறுவனங்களுக்கு சென்று வேலை பார்த்தேன்; திருப்பூரில், நுாற்றுக்கும் அதிகமான நிறுவனங்களில் வேலை பார்த்துள்ளேன். கை மடிக்கும் வேலை துவங்கி, அனைத்தும் கற்றுக்கொண்டேன். கடந்த, 2001ல் பிளஸ் 2 முடித்த பிறகு, முழு பணியாளராக வேலையில் இறங்கினேன். 2005ம் ஆண்டு முதல், சிங்கர் டெய்லர் கான்ட்ராக்ட் வேலையை துவக்கினேன். பிறகு, காதர்பேட்டையில், எக்ஸ்போர்ட் செகண்ட்ஸ் ஆடைகளை எடுத்து விற்பனை செய்ய துவங்கினேன். வடமாநில வர்த்தகர் பழக்கம் ஏற்பட்டதால், 2013ல் சிறிய பின்னலாடை உற்பத்தி யூனிட்டை துவக்கி, ஏற்றுமதி தரத்தில் ஆடைகளை வடிவமைக்க துவக்கினேன்; கடந்த சில ஆண்டுகளாக, நாடு முழுவதும் ஆர்டர் பெற்று, ஆறு 'பிராண்ட்'களில் ஆடைகளை தைத்து கொடுக்கிறேன். ஆடை வர்த்தகத்தில், வரவு -செலவு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலாளியாக துவங்கி, தொழில் முனைவோராக உயர்ந்துள்ளதால், மிகத்தரமான ஆடைகளை உற்பத்தி செய்து வழங்க முடிகிறது; நாடு முழுவதும் சப்ளை செய்கிறேன்; மார்க்கெட்டிங் செய்வதும், எளிதாக மாறிவிட்டது.தொழில் நடத்தும் உரிமையாளராக இருந்தாலும், அனைத்து உற்பத்தி பணிகளையும் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.--------கொட்டிக்கிடக்கும் வாய்ப்புபுரிந்துகொண்டால் முத்தாய்ப்புலோகேஷ், பிரின்டிங் நிறுவன உரிமையாளர், கருவம்பாளையம்:திருப்பூரில் உள்ள இளைஞர்களுக்கு, ஏராளமான தொழில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. எந்தத் தொழிலாக இருந்தாலும், திட்டமிட்டு உழைத்தால், முன்னேற முடியும்; சொந்தக்காலில் நிற்க முடியும். என் தந்தை சாய ஆலை நடத்தி வந்தார்; நான் படித்து முடித்த போது, 2011ல், சாயத்தொழில் பிரச்னை அதிகம்.சுற்றுச்சூழல் பாதிப்பு என்பதால், நான் வேறு தொழிலுக்கு மாற முடிவு செய்தேன். சில மாதங்கள், பனியன் நிறுவனத்துக்கு சென்று பணிகளை கற்றுக்கொண்டேன். பிறகு, வாஷிங் யூனிட் துவக்கி நடத்தினேன்; அது ஒத்துவரவில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர் ஆலோசனைப்படி, பிரின்டிங் யூனிட் துவக்கி, கடந்த ஆறு ஆண்டுகளாக, வெற்றிகரமாக இயக்கி கொண்டிருக்கிறேன். 'டிஜிட்டல்' பிரின்டிங் வந்த பிறகு, இத்தொழிலில் உள்ள சிரமம் குறைந்துவிட்டது. ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆடைகளுக்கான பிரின்டிங் வாய்ப்பு கிடைக்கிறது.இருப்பினும், பிரின்டிங் சேவைக்கான, 'ஜாப் ஒர்க்' கட்டணம் பெறுவதில் தாமதம் ஏற்படும் போது சோர்வு ஏற்படுகிறது. ஒரு தொழில் மட்டும் போதாது என்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, 'ஈவன்ட் மேனேஜ்மென்ட்' தொழிலையும் செய்து வருகிறேன். கொரோனா தொற்றுக்கு பிறகு, தொழிலை விரிவாக்கம் செய்து வருகிறேன். பல்வேறு நபர்களுடன் தொடர்பு இருப்பதால், இதன் மூலமாகவும் வருவாய் ஈட்ட முடியும் என்பதை தெரிந்துகொண்டேன். *


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ