உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளியில் உணவுத் திருவிழா; உணவு வகைகளுடன் அசத்திய குட்டீஸ் 

அரசு பள்ளியில் உணவுத் திருவிழா; உணவு வகைகளுடன் அசத்திய குட்டீஸ் 

திருப்பூர்; திருப்பூர், பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் உணவுத்திருவிழா நேற்று நடந்தது. இதில், விதவிதமான உணவு வகைகளுடன் பங்கேற்று குழந்தைகள் அசத்தினர்.விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியஜாஸ்மீன்மாலா வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் முஸ்ராக்பேகம், சின்னக்கண்ணு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் திலகவதி முன்னிலை வகித்தனர். மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.உணவு திருவிழாவின் ஒரு பகுதியாக, 11 தலைப்புகளில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. 'பாலகமும், சிறுதானியமும்' என்ற அரங்கை, கவுன்சிலர் லோகநாயகி, கவுன்சிலர் முத்துச்சாமி, முன்னாள் கவுன்சிலர் பட்டுலிங்கம் திறந்து வைத்தனர். 'சிப்பிக்குள் முத்து தோசை அரங்கை' ஏற்றுமதியாளர் சங்க செயலாளர் திருக்குமரன், லீவாவதி, 'பாரம்பரிய அரிசி அரங்கை' வட்டார வள மைய மேற்பார்வையாளர் செந்தாமரைக்கண்ணன் திறந்து வைத்தனர்.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவியர் தனியே, குழுவாக, தங்களின் உணவு சார்ந்த படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். 'ஜில்ஜில் கூழ் கூழ்' அரங்கில் குழந்தைகளுக்கு கம்மங்கூழ், சுண்டல், களி, ராகிஉருண்டை உள்ளிட்ட தானியங்கள் வழங்கப்பட்டது.குட்டீஸ்களை படைப்புகளை பெற்றோர் ஆர்வமுடன் பார்வையிட்டு உணவு ரகங்களை சுவைத்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ