உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இலவச காது பரிசோதனை முகாம் மெட்ெஹல்ப்ல் இன்று துவக்கம்

இலவச காது பரிசோதனை முகாம் மெட்ெஹல்ப்ல் இன்று துவக்கம்

திருப்பூர், : திருப்பூர், அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர் ஸ்டாப், கீதா பார்மசி அருகில் உள்ள 'மெட்ெஹல்ப்' காது பரிசோதனை மையத்தில், உலக செவித்திறன் தினத்தை முன்னிட்டு இன்று முதல் வரும் 8ம் தேதி வரை இலவச காது பரிசோதனை முகாம் நடக்கிறது.'மெட்ெஹல்ப்' காது பரிசோதனை மைய ஒலியியல் நிபுணர் டாக்டர் ராம் கார்த்திக் கூறியதாவது:செவித்திறன் குறைபாடால், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பாதிப்படைகின்றனர். வயது மூப்பு காரணமாக செவித்திறன் இழக்கும் வாய்ப்பு உள்ளது. இளம் மற்றும் நடுத்தர வயதினர் 'இயர்பட்ஸ்' போன்ற கருவிகளை அதிகம் பயன்படுத்துவது, செவித்திறனை கடுமையாக பாதிக்கிறது.இதற்கு தீர்வு அளிக்கும் விதமாக 'மெட்ெஹல்ப்' காது பரிசோதனை மையத்தில் இன்று(3ம் தேதி) முதல் 8ம் தேதி வரை இலவச காது பரிசோதனை முகாம் நடக்கிறது.இதில், பழைய காது கேட்கும் கருவிகள் இருந்தால், அவற்றை புதிய கருவிகளாக மாற்றிக்கொள்ளலாம். புதிய காது கேட்கும் கருவிகள் வாங்குபவர்களுக்கு 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய புளூடூத் மற்றும் ரீசார்ஜ் செய்யக்கூடிய காது கருவிகளும், அதிநவீன செவித்திறன் நோய் கண்டறியும் வசதியும் உள்ளது. வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: 90431 77951; 99443 50949.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி