உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மகன் மதிப்பெண் கூறாததால் விரக்தி தந்தை தற்கொலை

மகன் மதிப்பெண் கூறாததால் விரக்தி தந்தை தற்கொலை

திருப்பூர்:பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் குறித்து மகன் தெரிவிக்காததால், விரக்தியடைந்த தந்தை, மது போதையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருப்பூர், குமரானந்தபுரம், ஏழாவது வீதியில் வசிப்பவர் சேகர், 40. இவரின் குடும்பத்தினர் தர்மபுரியில் உள்ள நிலையில், பனியன் நிறுவனம் ஒன்றில், டெய்லராக திருப்பூரில் பணியாற்றி வந்தார். 14ம் தேதி இரவு அறையில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வடக்கு போலீசார் விசாரித்தனர்.போலீசார் கூறுகையில், 'திருப்பூரில் தங்கிய சேகர், வேலை செய்து, குடும்பத்தினருக்கு தேவையான பணம் அனுப்பி வந்துள்ளார். அவரின் மகன் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண் குறித்த கேட்டறிய தொடர்பு கொண்டுள்ளார்.'ஆனால், மதிப்பெண் சொல்லாமல், தந்தையிடம் பேசாமல் மகன் இருந்துள்ளார். இதனால், வேதனையடைந்த சேகர், குடிபோதையில் துாக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை