உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிணறு துார்வாரும் போது கிடைத்தார் விநாயகர்

கிணறு துார்வாரும் போது கிடைத்தார் விநாயகர்

பல்லடம்: பல்லடம் ஒன்றியம், செம்மிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 70 அடி ஆழ கிணற்றில், செடி கொடிகள் முளைத்தும், புதர் மண்டியும், பாழடைந்து கிடந்தது.இக்கிணறு, ஊராட்சி நிர்வாகத்தின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளது. பழமையான கிணற்றுக்குள் செல்ல அமைக்கப்பட்டுள்ள நீண்ட படிக்கட்டுகள், பழமையை எடுத்துரைக்கிறது.ஊராட்சித் தலைவர் ஷீலா புண்ணியமூர்த்தி கூறுகையில், ''200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான இந்த கிணறு, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது. முந்தைய காலங்களில்,இக்கிணறு, நீச்சல் குளம் போல் குளிப்பதற்காக பயன்பட்டு வந்ததாக முன்னோர்கள் கூறியுள்ளனர். பின்னாளில், போதிய பராமரிப்பு இன்றி, புதர்கள் மண்டி பயன்பாடற்று போனது. நீண்ட காலத்துக்குப் பின், பழமையான இக்கிணறு தூர்வாரப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு கருதி கிணற்றைச் சுற்றிலும் தடுப்புச் சுவரும் அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

கிணற்றுக்குள் கிடைத்த விநாயகர்!

நுாற்றாண்டு பழமை வாய்ந்த இக்கிணற்றை துார்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த போது, கிணற்றுக்குள் ஒன்றரை அடி உயரத்தில் விநாயகர் சிலை ஒன்று கிடைத்தது. இதனை இப்பகுதி மக்கள் மீட்டு, அரச மரத்தடியில் வைத்து வழிபட்டு வருகின்றனர். இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலை கிடைத்தது, இப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Karunagaran
செப் 10, 2024 15:23

2024 ஆண்டுகளுக்கு முன் இயேசு கிறிஸ்து பிறந்த பின் உற்பத்தி ஆன வெளிநாட்டு பாலைவன கிறித்தவ சமயம் பைபிள் 2067 ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி ஆன வெளிநாட்டு பாலைவன இஸ்லாமிய மதம் திருக்குரான் பல டிரில்லியன் ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி ஆன இந்து மதம் நூல்கள் தெரியாமல் படிக்காமல் குரட்டாம்பாட வழிபாடு செய்து வருகின்றனர் நம் இந்துக்கள் தமிழர்கள் பகவத் கீதை நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஆழ்வார்கள் நாயன்மார்கள் அருளிய நூல்கள் திருக்குறள் நாலடியார் திருவாசகம் சிவபுராணம் ரிக் யஜுர் சாம அதர்வண வேதம் கொங்கணவர் புலஸ்தியர் அகஸ்தியர் போகர் திருமூலர் அருளிய நூல்கள் அண்டசராசரம் யோக நிலையில் சென்று வந்து எழுதிய நூல்கள் செய்யுளாக உள்ளதை பொழிப்புரை உடன் படித்து புரிந்து கொள்ள உலகையே வெல்ல முடியும் இரும்பை செம்பை தங்கமாக்கும் வழிமுறைகள் உள்ளன தமிழிலக்கணம் அகஸ்தியர் அருவி அகஸ்தியர் ரசவாதம் புலஸ்தியர் நூல்கள் பதார்த்த குண சிந்தாமணி அகஸ்தியர் 12000 போகர் திருமூலர் 7000 திருமந்திரம் வைத்தியம் சித்த மருத்துவம் ஆயூர்வேதம் நூல்கள் 18 சித்தர்கள் அருளிய செய்யுளாக உள்ளதை பொழிப்புரை உடன் படித்து புரிந்து கொள்ள இறைவனை நேரில் கண்டு வழிபட முடியும் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் உள்ளன படிக்காமல் குரட்டாம்பாட வழிபாடு செய்து வருகின்றனர்


Sankara Subramaniam
செப் 08, 2024 14:05

நல்ல சகுணம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை