உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / லாந்தர் படத்துக்குநல்ல வரவேற்பு; நடிகர் விதார்த்

லாந்தர் படத்துக்குநல்ல வரவேற்பு; நடிகர் விதார்த்

''லாந்தர் படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது'' என்று நடிகர் விதார்த் கூறினார்.விதார்த் நடித்த 'லாந்தர்' திரைப்படம் வெளியாகியுள்ளது. திருப்பூர் வாவிபாளையத்தில் உள்ள கே.எஸ்.டி., தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து விதார்த் படம் பார்த்தார். ரசிகர்களுடன் கலந்துரையாடினார். ரசிகர்கள், அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.விதார்த் கூறியதாவது:'லாந்தர்' திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படத்தில் த்ரில்லர் கதா பாத்திரத்தில் நடித்துள்ளேன். முதல் கட்டமாக நுாறு தியேட்டர்களில் படம் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து கூடுதல் தியேட்டர்களில் வெளியிடப்படும்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்துள்ளது வருத்தமளிக்கிறது. இதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. நாம்தான் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.பட தயாரிப்பாளர் திருப்பூரை சேர்ந்த பத்ரிநாரா யணன் உடன் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்