உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு - வேம்பு திருக்கல்யாண உற்சவம்

அரசு - வேம்பு திருக்கல்யாண உற்சவம்

பல்லடம்;பல்லடம் அடுத்த காரணம்பேட்டை, சங்கோதிபாளையம் கிராமத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் திடலில், அரசு- - வேம்பு திருக்கல்யாண உற்சவம் நடத்தது. நேற்று முன்தினம், அரசு - வேம்பு மரங்களுக்கு உப்பு, புளி, தண்ணீர் மற்றும் விளக்கு வைத்து வழிபாடு நடந்தது. தொடர்ந்து, உப்பு, ஜவுளி, மாங்கல்யம் வைத்து நிச்சயம் செய்யப்பட்டது. மாலை 5:00 மணிக்கு, மாப்பிள்ளை மற்றும் பெண் அழைப்பு வைபவங்கள் நடந்தன.நேற்று காலை, 9.00 மணிக்கு, தேவர்கள் புடை சூழ, சகல மங்கள இசையுடன், தேவ பாராயணம், திருமுறைகள் ஓதி திருமாங்கல்யம் தரும் நிகழ்வு நடந்தது. சீர்வரிசைகள் வழங்கப்பட்டு சிவபெருமான் பார்வதிக்கு திருக்கல்யாணம் நடந்தது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு பரிகார பூஜைகளும் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கோடங்கிபாளையம் ஆனந்தபுரி ஆதீனம் பழனிசாமி அடிகளார் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். பக்தர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது. ----2 படங்கள்காரணம்பேட்டை, சங்கோதிபாளையம் கிராமத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் திடலில், அரசு - வேம்பு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி