ஏ.வி.பி., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
திருப்பூர்: திருப்பூர், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ள ஏ.வி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், 4வது ஆண்டு பட்டளிப்பு விழா, கல்லுாரி கலையரங்கில் நடந்தது.கல்லுாரி முதல்வர் கதிரேசன் வரவேற்றார். கல்விக் குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன், தலைமை வகித்து, பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார். கல்லுாரி செயலர் லதா, முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக, முன்னாள் துணை வேந்தர் அண்ணா பல்கலை மற்றும் ஜார்க்கண்ட் கவர்னரின் கல்வி ஆலோசகர் பாலகுருசாமி பங்கேற்று, 612 மாணவிகளுக்கு பட்டமும், பாரதியார் பல்கலை அளவிலான தர வரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற, 4 மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். பல்கலை அளவில் அதிக மதிப்பெண் பெற்ற, 25 மாணவிகளுக்கு பதக்கம் வழங்கினார்.பாலகுருசாமி பேசுகையில்,''மாணவர்கள் தங்களின் முதல் நன்றியை தங்களின் பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும், சமுதாயத்திற்கும் நன்றி செலுத்த வேண்டும். மாணவர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும், கல்வி கற்பித்த ஆசிரியர்களை நினைவில் கொள்ள வேண்டும்,'' என்றார். விழாவில், கல்லுாரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்று, சிறப்பித்தனர்.