உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வட்டி தள்ளுபடிக்கு விண்ணப்பிக்க இன்று ஜி.எஸ்.டி., விளக்க கூட்டம்

வட்டி தள்ளுபடிக்கு விண்ணப்பிக்க இன்று ஜி.எஸ்.டி., விளக்க கூட்டம்

திருப்பூர்; தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 பிரிவு 128 ஏ-ன்படி, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளுக்கு, நிலுவை வரித்தொகையை செலுத்தி, அபராதம் மற்றும் வட்டி தள்ளுபடி செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள, வணிகவரி கட்டடத்தின் நான்காவது தளத்தில் உள்ள கூட்டரங்கில், சட்ட விதிகளில்கூறியபடி, வரித்தொகையை மட்டும் செலுத்தி, அபராதம், வட்டி தள்ளுபடி பெற, ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது குறித்த விளக்க கூட்டம், இன்று மாலை, 3:00 மணிக்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை