மேலும் செய்திகள்
ஒரு வாரத்தில் 23 பேருக்கு 'குண்டாஸ்'
13-Aug-2024
திருப்பூர்;கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூன் 18 ம் தேதி, கோல்டன் நகரைச் சேர்ந்த சதீஸ்குமார், 30 என்பவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதில் தொடர்புடைய பாலகிருஷ்ணன், 33 மற்றும் கார்த்திக், 28 ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவும், பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து வந்ததால், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டார்.கோவை மத்திய சிறையில் உள்ள அவர்கள் இருவருக்கும் இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையில் நடப்பாண்டில் இதுவரை 70 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
13-Aug-2024