ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
திருப்பூர்:வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்களை மத்திய அரசு பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, ஹிந்து முன்னணி சார்பில், தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அவ்வகையில், திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில், இக்கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சேவுகன் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.மாநில அமைப்பாளர் ராஜேஷ் ஹிந்துக்களின் நிலை குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், கோட்ட, மாவட்ட, நகர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் மற்றும் ஹிந்து அன்னையர் முன்னணி, ஹிந்து இளைஞர் முன்னணி மற்றும் ஹிந்து ஆட்டோ முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.---திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் ஹிந்து முன்னணி சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.