மேலும் செய்திகள்
குறு, சிறு தொழில்களின் வரிச்சுமை குறையுமா?
30-Jan-2025
திருப்பூர்; திருப்பூரில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை வர்த்தகம் சாத்தியமாவதற்கு, பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு புதிய சலுகைகள், மானிய திட்டங்களை தமிழக அரசு மேற்கொள்ளுதல் உள்ளிட்ட யோசனைகளை தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் - சைமா தெரிவித்துள்ளது.தமிழக பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் குறித்து 'சைமா' தலைவர் ஈஸ்வரன், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதம்:குஜராத், பீஹார், மத்திய பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா என நாடு முழுவதும் பல்வேறு மாநில தொழிலாளர்கள், பின்னலாடை உற்பத்தி நகரான திருப்பூரை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.வெளிமாநிலங்களில் சலுகைஅதிக வேலைவாய்ப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் கைகொடுக்கும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியை தங்கள் பகுதிகளில் நிறுவுவதற்காக, வெளிமாநில அரசுகள் பல்வேறு சலுகைகள், மானியங்களை அறிவித்துள்ளன. திருப்பூரை சேர்ந்த சில பெரிய நிறுவனங்கள், வெளிமாநிலங்களுக்கு நகர்ந்து, ஆடை உற்பத்தியை துவக்கிவிட்டன.கடும் வர்த்தகப்போட்டிசலுகைகளை பயன்படுத்தி நம் நாட்டின் பிற மாநிலங்களில் தயாராகும் ஆடைகள் மற்றும் குறைந்த விலைக்கு இறக்குமதியாகும் வங்கதேச ஆடைகளால், திருப்பூர் உள்பட தமிழக பின்னலாடை உற்பத்தி துறையினர் கடும் வர்த்தக போட்டியை எதிர்கொள்ள நேரிடுகிறது. தற்போதைய சவால்களை எதிர்கொள்ள ஏதுவாக, திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு புதிய சலுகைகள், மானிய திட்டங்களை அறிவிக்கவேண்டும்.உச்சநேர மின் பயன்பாட்டுக் கட்டணம், நிலை மின் கட்டண உயர்வு, அனைத்து தொழில் துறையையும் பாதிக்கச் செய்கிறது. மின் கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வு சுமையிலிருந்து பின்னலாடை தொழில்முனைவோரை காப்பாற்றவேண்டும்.தொழில்முனைவோர் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றினால், திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் 60 ஆயிரம் கோடியாகவும், உள்நாட்டு சந்தைக்கான வர்த்தகம் 40 ஆயிரம் கோடி என, லட்சம் கோடி வர்த்தக இலக்கை விரைவில் எட்டிப்பிடித்துவிடுவோம். இதனால், புதிதாக பல லட்சம் தொழிலாளருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, மாநிலத்தின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்.இவ்வாறு, அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
''திருப்பூர், ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பின்னலாடை ஏற்றுமதியும்; 30 ஆயிரம் கோடி மதிப்பில் உள்நாட்டு வர்த்தகமும் மேற்கொள்கிறது. புதிய சந்தை வாய்ப்புகளை கவர்ந்திழுப்பதற்கும், தொழில் நுட்ப மேம்பாட்டுக்கும் கண்காட்சிகள் அவசியமாகின்றன. நாட்டின் பின்னலாடை தலைநகராக உள்ள திருப்பூரில், சர்வதேச தரத்தில் நிரந்தரக் கண்காட்சி வளாகம் அமைப்பதற்கான அறிவிப்பை பட்ஜெட்டில் அறிவிக்கவேண்டும்'' என்கிறார் 'சைமா' தலைவர் ஈஸ்வரன்.
30-Jan-2025