மேலும் செய்திகள்
பள்ளி மாணவியை ஏமாற்றிய மாணவன் மீது போக்சோ வழக்கு
05-Sep-2024
திருப்பூர் : குண்டடத்தில் ரோட்டில் நடந்து சென்ற, 16 வயது பள்ளி மாணவியிடம், தகாத வார்த்தையில் பேசிய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.ஈரோட்டை சேர்ந்தவர் சஞ்சய், 32. மனைவியுடன் உறவினர் வீட்டு திருமணத்துக்கு குழந்தையை அழைத்து கொண்டு, திருப்பூர் மாவட்டம், குண்டடத்துக்கு வந்தார். இருவரையும் மண்டபத்தில் விட்டுவிட்டு, மது அருந்தி போதையில், அப்பகுதியை சேர்ந்த, 16 வயது பள்ளி மாணவியை பின்தொடர்ந்தார்.இதனை பார்த்து நின்ற மாணவி, வாலிபரிடம் கேள்வி எழுப்பிய போது, மாணவியிடம் தகாத வார்த்தையில் பேசினார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் நடந்ததை கூறினார்.புகாரின் பேரில், தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவியிடம் தவறாக பேசிய சஞ்சய் மீது 'போக்சோ' வழக்கு பதிந்து கைது செய்தனர்.
05-Sep-2024