ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க வலியுறுத்தல்
உடுமலை : உடுமலை அருகேயுள்ள, குடிமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின், ஆண்டு குழு கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடந்தது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் மவுன குருசாமி தலைமை வகித்தார்.வேளாண்மை மற்றும் வணிகத்துறை அலுவலர், ஆனந்த், தோட்டக்கலைத் துறை அலுவலர் சரவணன், உதவி அலுவலர் கோவிந்தன், நிறுவன செயலாளர் சதீஷ், பொருளாளர் விஜய் சேகரன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், பங்கேற்றனர்.இதில், தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை, தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து வருகின்றன.அதனை தமிழக அரசு கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் வாயிலாக பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும், உரம் மற்றும் பூச்சி மருந்து கடை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.