உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கட்டளை மையத்தில் ஆய்வு

கட்டளை மையத்தில் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இம்மையம் மாவட்ட அளவிலான அரசு துறைகள் குறித்த விவரங்கள் கொண்ட தகவல் தொகுப்பு மையமாக உள்ளது. மாநகரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் இங்கு கண்காணிக்கப்படுகிறது.மாநகராட்சி அளவில் பொதுமக்களிடம் பொதுப்பிரச்னைகள் குறித்து புகார்கள் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளுதல்; அதன் விவரங்கள் தெரிவித்தல் உள்ளிட்ட பணிகள் இங்கு மேற்கொள்ளப்படுகிறது.இந்த மையத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !