உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு கட்டண நிலுவை செலுத்த அறிவுறுத்தல்

குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு கட்டண நிலுவை செலுத்த அறிவுறுத்தல்

உடுமலை; உடுமலை நகராட்சியில், குடிநீர், பாதாள சாக்கடை கட்டணம் நிலுவை வைத்திருந்தால், இணைப்பு துண்டிக்கப்படும் என, நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.உடுமலை நகராட்சி கமிஷனர் சரவணகுமார் வெளியிட்டுள்ளகூறியிருப்பதாவது: உடுமலை நகராட்சி எல்லைக்குட்பட்ட, 1 முதல், 33 வார்டுகளில், நகராட்சி வாயிலாக, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு பெற்றுள்ள பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை கட்டண நிலுவை தொகையை உடனடியாக செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.நகராட்சி ஊழியர்களை கொண்டு, வரி குடிநீர், பாதாள சாக்கடை கட்டணம் நிலுவை வைத்துள்ளவர்களின் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது. எனவே, உடனடியாக நிலுவையிலுள்ள குடிநீர், பாதாள சாக்கடை கட்டணத்தை செலுத்தி, இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி