கபடி, எறிபந்து வீரர்கள் ஆர்வம்
திருப்பூர்:பள்ளி கல்வித்துறை சார்பில், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய, எஸ்.ஜி.எப்.ஐ., மண்டல அணித்தேர்வு, 14, 17 மற்றும், 19 வயது பிரிவினருக்கு, காங்கயம் அடுத்த நத்தக்காடையூர், பில்டர்ஸ் இன்ஜி., கல்லுாரியில் நேற்று நடந்தது.மாணவர் கூடைப்பந்து, ேஹண்ட்பால், கபடி அணியில் இடம் பெற, நான்கு மாவட்டங்களில் இருந்து, 765 மாணவர்கள் வந்திருந்தனர். அதிகபட்சமாக எறிபந்து போட்டியில், 316 பேர் பங்கேற்றனர். கபடியில், 280 வீரர்கள், கூடைப்பந்தில், 166 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவுக்கு 'நாக்-அவுட்' முறையில் வீரர்கள், அணித்தேர்வு நடந்தது. இறுதி செய்யப்படும் மாணவர்கள் எஸ்.ஜி.எப்.ஐ., மாநில அணிக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.முன்னதாக போட்டிகளை, கல்லுாரி முதல்வர் ராம்குமார் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில், 40 பேர் கொண்ட உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர் குழுவினர் இணைந்து போட்டிகளை நடத்தினர்.