உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க அழைப்பு

கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர்:தொழில் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு, நடப்பு 2024 - 25ம் கல்வியாண்டுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.மாணவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும், மாணவியருக்கு 36 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். கல்வி உதவித்தொகைக்கு, www.ksb.gov.inஎன்கிற தளத்தில், வரும் நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும், மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவிஇயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421 2971127 என்கிற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை