உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விதிமீறி கருக்கலைப்பு மாத்திரை விற்றால் சிறை தண்டனை

விதிமீறி கருக்கலைப்பு மாத்திரை விற்றால் சிறை தண்டனை

பல்லடம்; திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட குடும்ப நல செயலகம் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை இணைந்த, தனியார் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனை சார்ந்த மருந்தகங்களுக்கு கருக்கலைப்பு மருந்துகள் விற்பனை செய்வது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம், காரணம்பேட்டையில் நேற்று நடந்தது. குடும்ப நலத்துறை உதவி இயக்குனர் கவுரி தலைமை வகித்தார். மாவட்ட கூடுதல் பயிற்றுநர்கள் ராணி, சார்லஸ், பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி மற்றும் கண்காணிப்பாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட குடும்ப நல செயலகம் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை இணைந்த, தனியார் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனை சார்ந்த மருந்தகங்களுக்கு கருக்கலைப்பு மருந்துகள் விற்பனை செய்வது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம், காரணம்பேட்டையில் நேற்று நடந்தது.குடும்ப நலத்துறை உதவி இயக்குனர் ராணி பேசுகையில், ''மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்யும் மருந்து கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், உரிமையாளர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். மேலும், அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும். மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல், கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால், கர்ப்பிணி பெண்களின் உயிருக்கே ஆபத்து உள்ளது. எனவேதான், விதிமுறை மீறி கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்தாமல், மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கருக்கலைப்பு செய்யப்படுகிறது. இந்த சேவையை பெற்று பயன்பெறும் பெண்களின் விவரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ