உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலிடெக்னிக்கில் சேரலாமே!

பாலிடெக்னிக்கில் சேரலாமே!

திருப்பூர்:மாநிலம் முழுதும், 54 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இங்கு டிப்ளமோ படிப்புக்கு, கடந்த 10ம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. நம் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், உடுமலை, திருப்பூர் பாலிடெக்னிக்குக்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. கடந்த, 25ம் தேதியுடன் நிறைவு பெற இருந்த விண்ணப்பிப்பதற்கான அவகாசம், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், htttps://www.tnpoly.inஎன்ற இணையதளத்தில், 150 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். தகவல்களுக்கு திருப்பூர் உதவி மையத்தை 97908 38912, 95002 33407 என்ற எண்களில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ