உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீதிபதி பணியிடங்கள் காலி; வழக்கு விசாரணை சுணக்கம்

நீதிபதி பணியிடங்கள் காலி; வழக்கு விசாரணை சுணக்கம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், காலியாகவுள்ள நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால், வழக்கு விசாரணைகளில் தேக்க நிலை நிலவுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் நீதித்துறையில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் செயல்படுகிறது. இதில், மாவட்ட அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட மாவட்ட அளவிலான கோர்ட் மற்றும் ஜே.எம்., கோர்ட் அமைந்துள்ளன.இவ்வளாகத்தில் தற்போது புதிதாக துவங்கப்பட்ட, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் தொடர்பான வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு கோர்ட் உள்ளது. இக்கோர்ட் கடந்த பிப்., மாதம் துவங்கிய நிலையில், இங்கு, 2வது கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய பத்மா அந்த கோர்ட்டுக்கு மாறுதல் செய்யப்பட்டார். இதனால், 2வது கூடுதல் மாவட்ட நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது.அதேபோல் கடந்த சில மாதம் முன், வாகன விபத்து இன்சூரன்ஸ் வழக்குகள் விசாரிக்க சிறப்பு கோர்ட் துவங்கப்பட்டது. இந்த கோர்ட்டுக்கும் புதிதாக நீதிபதி நியமிக்கப்படாமல், மகிளா கோர்ட் நீதிபதியாகப் பணியாற்றியா பாலு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் மாறுதல் செய்யப்பட்டதால், மகிளா கோர்ட் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது.இது தவிர முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பணியிடம், ஜே.எம்., எண்: 3 மாஜிஸ்திரேட், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆகிய பணியிடங்கள் மற்றும் லோக் அதாலத் நிரந்தர நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஆகிய பணியிடங்களும் காலியாக உள்ளன. அவ்வகையில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் மட்டும் ஏழு நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.மேலும், பல்லடத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் சார்பு நீதிபதி பணியிடங்கள், உடுமலையில் கூடுதல் மாவட்ட நீதிபதி பணியிடம் மற்றும் ஜே.எம்., எண்: 1 மாஜிஸ்திரேட் ஆகிய நான்கு பணியிடங்கள் நீண்ட காலமாகவே காலியாக உள்ளன.இவ்வாறு நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ள காரணத்தால் வழக்கு விசாரணைகளில் பெரும் தேக்க நிலை ஏற்படுகிறது. இதனால், வழக்குதாரர்கள், வக்கீல்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை