உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உள்நாட்டு பின்னலாடை வர்த்தகத்திலும் கோலோச்சும் பிராண்டட் எதிர்பார்ப்பு

உள்நாட்டு பின்னலாடை வர்த்தகத்திலும் கோலோச்சும் பிராண்டட் எதிர்பார்ப்பு

திருப்பூர்;ஏற்றுமதிக்கு நிகராக உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியிலும், 'பிராண்டட்' எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், பிரபல வர்த்தக நிறுவனங்கள் திருப்பூரை தேடி வந்துகொண்டிருப்பதாக, தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில், ஆண்டுக்கு, 34 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடக்கிறது; உள்நாட்டு உற்பத்தி, 30 ஆயிரம் கோடி ரூபாயை தொட்டுள்ளது. மொத்தம், 63 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை, ஒரு லட்சம் கோடியாக உயர்த்துவதே, திருப்பூரின் முக்கிய இலக்காக மாறியிருக்கிறது. ஏற்றுமதி வர்த்தகத்தில் 'பிராண்டிங்' என்பது மிக முக்கியம்; பிராண்டட் நிறுவனங்களுக்காக, ஆடை உற்பத்தி செய்யாமல், புதிய திருப்பூர் பிராண்ட் உருவாக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.உள்நாட்டு பின்னலாடை'பிராண்டட்' நிறுவனங்கள்இந்தியாவின் பிரபல வர்த்தக நிறுவனங்கள், தங்கள் பிராண்டிங், உள்ளாடை மற்றும் ஆடை தயாரிக்க வேண்டுமென, திருப்பூரை நோக்கி வரத்துவங்கியுள்ளன. இதனால் திருப்பூர் உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் தொழில் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.சூரத், ஆமதாபாத், லுாதியானா போன்ற நகரங்களில், செயற்கை நுாலிழை ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. விளையாட்டு ஆடைகளுக்கு அவை ஏற்றதாக இருக்கிறது. மற்றபடி, உள்நாட்டு சந்தைகளில் பருத்தி நுாலிழையில் தயாரிக்கப்படும். உள்ளாடைகளையே, மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்துகின்றனர்.உற்பத்தியாகும் ஆடைகளின் தரத்துக்கு மதிப்பளித்து, 'பிராண்டட்' நிறுவனங்கள், உற்பத்தி ஆர்டர்களை திருப்பூருக்கு வழங்குவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. வழக்கமான ஆர்டர்களுடன், 'பிராண்டட்' நிறுவன ஆர்டர்கள், கூடுதல் வாய்ப்பாக மாறியுள்ளதாக, உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.உள்நாட்டு வர்த்தகத்தில்'பிராண்டட்' முக்கியம்ரிலையன்ஸ், டாடா போன்ற நிறுவனங்கள், திருப்பூருக்கு, 5,000 கோடி ரூபாய் மதிப்பில், உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுக்கின்றன. உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் பயன்பெறுகின்றனர். ஏற்றுமதி வர்த்தகத்தை போலவே, உள்நாட்டு வர்த்தகத்திலும், 'பிராண்டட்' என்பது முக்கியமாக மாறிவிட்டது. இதனால், ஐ.கே.எப்., போன்ற கண்காட்சிகளில் பங்கேற்க வருமாறு, 'பிராண்டட்' நிறுவனங்களுக்கும், உள்நாட்டு பின்னாலடை நிறுவனங்களுக்கும் அழைப்புவிடுத்துள்ளோம். திருப்பூரின் தனித்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்களும், 'பிராண்டட்' நிறுவனமாக உயர முயற்சிக்க வேண்டும்.- சக்திவேல், நிறுவனத் தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்.'ஆர்டர்' அள்ளித்தரும்வடமாநில நிறுவனங்கள்ரிலையன்ஸ் போன்ற 'பிராண்டட்' நிறுவனங்கள், சில ஆண்டுகளாக, திருப்பூரில் உள்ளாடைகள் உற்பத்தி செய்து பெறுகின்றன. பருத்தி நுாலிழை உள்ளாடைகள் தரத்தை உணர்ந்து, மும்பை, டில்லி, குஜராத்தைச் சேர்ந்த, 'பிராண்டட்' நிறுவனங்கள், புதிதாக திருப்பூருக்கு ஆர்டர் கொடுக்கத் துவங்கியுள்ளன. இதன் மூலம், புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கின்றன.- பாலச்சந்தர், துணைத்தலைவர், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்(சைமா)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி