உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ராயபுரம் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்

ராயபுரம் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்

திருப்பூர்:திருப்பூர், ராயபுரம் ஸ்ரீபூமிநீளா சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில், 74ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் துவங்கியுள்ளது. ஸ்ரீகிருஷ்ணசாமி கோவிலில், தினமும் காலை, 7:00 மணிக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்கார பூஜைகளும், மாலையில் இசை நிகழ்ச்சி மற்றும் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. இரண்டாவது நாளான நேற்று, சவ்லப்ய ஸ்ரீகிருஷ்ணர் அலங்கார பூஜையும் நடந்தது. இன்று, கிரிதர கோபாலன் அலங்காரம் - பக்தி இன்னிசை, கோலாட்டம், கும்மியாட்ட நிகழ்ச்சி நடக்கிறது.நாளை, வெண்ணெய்த்தாழி கிருஷ்ணர் அலங்காரம் - சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூட மாணவியர் பரத நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. ஜெயந்தி விழாவையொட்டி, 27 ம் தேதி சந்தனகாப்பு அலங்காரமும், நம்பெருமாள் திருவீதியுலா மற்றும் உறியடி உற்சவமும் நடைபெற உள்ளது. வரும் 28ம் தேதி காலை, மஞ்சள் நீர் உற்சவமும், மதியம் அன்னதானமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீவேணுகோபாலகிருஷ்ண சுவாமி பக்தர்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர். ---உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது!திருப்பூர், ராயபுரம் ஸ்ரீபூமி நீளா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் துவங்கியது. சவ்லப்ய ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ