கும்பாபிேஷக ஆண்டு விழா
அவிநாசி, ராயம்பாளையம், ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு விழா நடந்தது. கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ஸ்ரீ ராஜ சரவண மாணிக்கசுவாமிகள் தலைமையில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் விஜயகுமார சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தினார். சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில் நிர்வாக குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.