உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கும்பாபிஷேக ஆண்டு விழா

கும்பாபிஷேக ஆண்டு விழா

அவிநாசி:சேவூர் அருகே தாளக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் கடந்தாண்டு, மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி, பஞ்சசுக்த பாராயணம், கலச ஆவாஹனம், மூலமந்திர ஹோமம், திரவியாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. திருப்பள்ளியெழுச்சி, திருப்பல்லாண்டு, வேதிகார்ச்சனை, சகஸ்ரநாம பாராயணம் ஆகியவையுடன் கலச புறப்பாடு நடைபெற்று, லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ