சேவூரில் கும்பாபிஷேக விழா உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
அவிநாசி;ஸ்ரீ வாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சேவூரில் அறம் வளர்த்த நாயகி உடனமர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அவிநாசி தாலுகாவுக்கு உட்பட்ட சேவூர், முறியாண்டம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், போத்தம்பாளையம், பாப்பாங்குளம், தத்தனுார் ஆகிய ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இன்று (6ம் தேதி) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.