உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் தொழிலாளர் அலுவலக கட்டடம்

திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் தொழிலாளர் அலுவலக கட்டடம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தின், 6 வது மாடியில் செயல்படுகிறது. தொழிலாளர் நலவாரிய அலுவலகம், பி.என்., ரோட்டில் உள்ள வாடகை கட்டடத்தில் இயங்குகிறது.தொழிலாளர் துறை துணை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், முத்திரை ஆய்வாளர் என, அலுவலகங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. இந்நிலையில், திருப்பூர் குமார்நகர் பகுதியில், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் கட்டடப்பட்டுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவிநாசி ரோடு, குமார் நகர் பகுதியில், அலுவலக கட்டுமான பணி நடந்தது. பணிகள் நிறைவு பெற்றதால், லோக்சபா தேர்தலுக்கு முன்னதாகவே திறப்பு விழா நடத்தப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திறக்கவில்லை.தற்போது பணிகள் முழுமையாக முடிந்துள்ள நிலையில், பல்வேறு வாடகை கட்டடங்களில் இயங்கும் அலுவலகங்களை ஒருங்கிணைத்து, அரசு கட்டடத்தில் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்ட நிர்வாகம், முதல்வர் நிகழ்ச்சிகள் வாயிலாக, ஒருங்கிணைந்த தொழிலாளர்துறை அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை