நாய்களுக்கு உரிமம்; கிராமங்களில் ஆர்வம்
உள்ளாட்சி நிர்வாகங்களிடம் இருந்து வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதில், மக்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.தெரு நாய்களால் ஆடு, கோழி உள்ளிட்டவை பலியாகும் சம்பவம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், முதற்கட்டமாக, வளர்ப்பு நாய்களை முறைப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கிராமப்பகுதிகளில், வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற, 100 ரூபாய், 'டேக்' கட்டணமாக, 60 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.ஊராட்சிகளின் சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரி வசூல் இனங்களில், 'இதர வரவினம்' என இனத்தின் கீழ், தெரு நாய்களுக்கான உரிமக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.