வீட்டில் துாங்கிய வாலிபர் மர்மச்சாவு
கோபி: கோபி அருகே அளுக்குளியை சேர்ந்தவர் ஜவகர், 21; பிளஸ் 2 வரை படித்துவிட்டு, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். தாயார் சந்திரிகா மகனை சாப்பிட எழுப்பினார். எழாததால் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்தார். ஜவகரின் இறப்பு குறித்து அவரின் தந்தை தமிழரசு புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.