மேலும் செய்திகள்
திருவாடானை கோர்ட்டில் மார்ச் 8ல் லோக் அதாலத்
23-Feb-2025
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று 'மெகா லோக் அதாலத்' திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது.ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட் வளாகத்தில் முதன்மை அமர்வு நீதிபதி குணசேகரன் துவக்கி வைத்தார். சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஷபீனா முன்னிலை வகித்தார்.மொத்தம், 7,419 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.இதில், 2,992 வழக்குகளில், மொத்தம், 65 கோடி ரூபாய் மதிப்பில், இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சமரச தீர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.இதில், நீதிபதிகள், செல்லதுரை, ஸ்ரீகுமார், பாலு, பத்மா, பிரபாகரன், ஸ்ரீவித்யா, கண்ணன், சுபஸ்ரீ, முருகேசன், ரஞ்சித்குமார், தனலட்சுமி வக்கீல் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள் பங்கேற்றனர்.
23-Feb-2025