மேலும் செய்திகள்
12 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசா வாலிபர்கள் கைது
01-Aug-2024
திருப்பூர்;திருப்பூர் நகரப் பகுதியில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் திருடு போவது வாடிக்கையாக உள்ளது. இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.நேற்று முன்தினம் அப்துல் ரகுமான், 40, தினேஷ், 32, சண்முகசுந்தரம், 33 ஆகியோரை கைது செய்த போலீசார், 25 பைக்குகள் பறிமுதல் செய்தனர். நேற்று, 2ம் நாள் விசாரணையில் மேலும் 13 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்குப் பின் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.கைதான நபர்களுக்கு, வேறு ஏதாவது வாகன திருட்டில் தொடர்புடையதா என்பது குறித்து, போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
01-Aug-2024