மேலும் செய்திகள்
வர்ணம் பூசாத வேகத்தடை வட்டம்பாக்கத்தினர் அவதி
24-Oct-2024
நம் நாட்டில் சாலை விபத்து என்பது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம் என்கிறது ஆய்வறிக்கை. சாலை விபத்தில் உயிரிழக்கும், 10 பேரில், 7 பேர் அதிவேகமாக வாகனங்களை செலுத்தியதால் இறந்துள்ளனர் என்பதும் ஆய்வறிக்கை கூறும் உண்மை.தொலை துாரங்களுக்கு பயணிக்கும் தேசிய, மாநில நெடுஞ்சாலையை விட, நகர, கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலைகளில் தான் விபத்து நேரிடுவது அதிகம். தொழில் நகரமான திருப்பூரில், சாலை விபத்து நடக்காதே நாட்களே இல்லை எனலாம். மக்கள் தொகை, வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நகர, ஊரக பகுதிகளுக்கு செல்லும் சாலைகளும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.உதாரணமாக, அவிநாசி - சேவூர் இடைப்பட்ட சாலை, தற்போது அகலப்படுத்தப்பட்டு, தடையில்லாத வாகன போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சாலையின் இடையே ஆங்காங்கே வேகத்தடைகளும், பேரி கார்டுகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஒரே வேகத்தில் சாலையில் 'பறக்க' முடியாது; பொறுமையாக பயணிக்க தான் முடியும்.சாலையில் ஆங்காங்கே பேரி கார்டு, வேகத்தடை வைக்கப்பட்டிருப்பதை, பலரும் விமர்சித்து வருகின்றனர். வேகத்தடை இருப்பதால், ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி நிறுத்தி செல்ல வேண்டியுள்ளது; இதனால், எரிபொருள் செலவு ஏற்படுகிறது. கேரளாவில் ஒரு இடத்தில் கூட வேகத்தடை இருக்காது என்பது போன்றெல்லாம் விமர்சனங்களை மக்கள் அள்ளி வீசி வருகின்றனர். இதுபோன்ற விமர்சனம், இந்த ரோட்டுக்கு மட்டுல்ல; வேகத்தடைகளும், பேரி கார்டுகளும் நிரம்ப வைக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த விமர்சனங்கள் எழத்தான் செய்கின்றன. விபத்துக்கு யார்பொறுப்பேற்பது?
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:ஒரே சீராக சாலையில் பயணிக்க வேண்டும் என்ற வாகன ஓட்டிகளின் எண்ணம் தவறில்லை; அதற்காக தான் சாலைகள் விரிவுபடுத்தப்படுகின்றன. ஆனால், நகர, ஊரக சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை காட்டிலும், மிக அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் ஏற்படும்.கேரளா மட்டுமின்றி நீலகிரி உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் கூட, வாகன ஓட்டிகள் இடதுபுறம் மட்டுமே செல்கின்றனர். இடது, வலது என மாறி, மாறி பயணித்து முன், பின் செல்லும் வாகன ஓட்டிகளை நிலைத்தடுமாற வைப்பதில்லை. 'இடதுபுறமே செல்க' என்பது தான் சாலை விதியும் கூட. அருகேயுள்ள கோவை மாவட்டத்தில் கூட வாகன ஓட்டிகள் சாலை விதியை முறையாக பின்பற்றுவதை பார்க்க முடியும்.ஆனால், திருப்பூரில் வாகன ஓட்டிகள் இடது, வலது என, முன் செல்லும் வாகனங்களின் இருபுறமும் 'ஓவர் டேக்' செய்கின்றனர். மிக அதிக வேகத்தில் பயணிக்கின்றனர். சாலை விதியை பின்பற்றுவதே இல்லை. அறிவுரையாலும், விழிப்புணர்வுகளாலும் இவர்கள் திருந்தாத நிலையில், வேகத்தடை மற்றும் 'பேரி கார்டு' வாயிலாக தானே அவர்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியும்.'சாலையில் வேக கட்டுப்பாடுடன், பொறுமையாக செல்ல வேண்டும்' என்ற நோக்கில் தான் 'பேரி கார்டு' மற்றும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இடத்தில் கூட முன்செல்லும் வாகனங்களை முந்திச் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில், சில வினாடி தாமதத்தை கூட ஏற்க முடியாமல், 'ஹாரன்' எழுப்பிய படியே முன் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளை பார்க்க முடியும். குறிப்பாக, விமானங்களை ஓட்டும் நினைப்பில், தனியார் பஸ் ஓட்டுநர்களின் அசுரத்தனமான வேகத்தை எப்படி கட்டுப்படுத்த முடியும்.அவிநாசி - சேவூர் சாலையின் இருபுறமும் குடியிருப்பு பகுதிகளும், அவற்றுக்கான அணுகு சாலைகளும் உள்ளன. இச்சாலையில் வாகனங்களின் அசுரத்தனமான வேகத்தால் நிச்சயம் விபத்து நேரிடும் என்பதாலும், முந்தைய காலங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்பதாலும் தான் சாலையில் ஆங்காங்கே வேகத்தடை, 'பேரி கார்டு' அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.அவிநாசி - சேவூர் சாலையின் இருபுறமும் குடியிருப்பு பகுதிகளும், அவற்றுக்கான அணுகு சாலைகளும் உள்ளன. இச்சாலையில் வாகனங்களின் அசுரத்தனமான வேகத்தால் நிச்சயம் விபத்து நேரிடும் என்பதாலும், முந்தைய காலங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன
24-Oct-2024