உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சறுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்

சறுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்

திருப்பூர்,:திருப்பூர் ரயில்வே மேம்பாலம், அவிநாசி ரோட்டில், நேற்று காலை, 11:00 மணியளவில் அந்த வழியாகச் சென்ற ஏதோ ஒரு வாகனத்திலிருந்து ஆயில் சிந்தி ரோட்டில் பரவியது. அடுத்தடுத்து வாகனங்கள் சென்ற நிலையில் இந்த ஆயில் சிறிது துாரம் ரோட்டில் பரவியது. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி சறுக்கி விழுந்து காயமடைந்தனர்.இதனைக் கண்ட அப்பகுதியிலுள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்கள் விரைந்து சென்று ஆயில் சிந்திப் பரவிக் கிடந்த பகுதியில் மண்ணைக் கொட்டி பாதுகாப்பு ஏற்படுத்தினர். இதே பகுதியில் எதிர்ப்புறத்தில் கடந்த சில நாள் முன் இதேபோல் ரோட்டில் ஆயில் சிந்திப் பரவியது. ஏராளமான இரு சக்கர வாகனங்கள் வளைவான இந்த இடத்தில் வழுக்கி விழுந்து காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ