| ADDED : ஜூலை 13, 2024 12:14 AM
திருப்பூர்:திருப்பூர், எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் துவங்கிய இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நேற்று நிறைவு பெற்றது.மத்திய அரசின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் சார்பில், 'நானோ பொருட்கள் -2024' எனும் தலைப்பில், இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் கடந்த, 11 ம் தேதி, எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் துவங்கியது. கல்லுாரி முதல்வர் தமிழ்மலர் (பொறுப்பு) தலைமை வகித்தார். இயற்பியல் துறை தலைவர் ஜெயசித்ரா முன்னிலை வகித்தார்.ைஹதராபாத் இந்திய தொழில்நுட்ப நிறுவன தலைமை பேராசிரியர் டாடா நரசிங்க ராவ், கிருஷ்ணன் கோவில், கலசலிங்கம் அகாடமி, வேதியியல் துறைத் தலைவர் சாம்சன்நேசராஜ், மும்பை டி.ஏ.இ., மைய இயற்பியல் துறை தலைவர் சங்கீதாபோஸ், கல்பாக்கம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய, உலோகம் மற்றும் பொருட்கள் குழு தலைவர் ஜான்பிலிப் உள்ளிட்டோர் பேசினர்.நிறைவாக, காரைக்குடி, மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி சிவசண்முகம், ஆற்றல் சேமிப்பு மற்றும் நானோ பொருட்கள் பற்றிய நுண்ணறிவு எனும் தலைப்பில் மாணவியரிடம் உரையாடினார்.கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் கிங்சன் சாலமன் ஜீவராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தார். பேராசிரியர்கள் எஸ்தர், பிரியா கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர். இயற்பியல் துறையின் முனைவர் படிப்பு படிக்கும் மாணவியர் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.