உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒடிசா வாலிபர் கொலை; ஆட்டோ டிரைவர் கைது

ஒடிசா வாலிபர் கொலை; ஆட்டோ டிரைவர் கைது

திருப்பூர்; திருப்பூர், காதர்பேட்டை, ஜெய்வாபாய் பள்ளி அருகே, நேற்றுமுன்தினம் நள்ளிரவில் வடமாநில வாலிபர் ஒருவர் தலையில் அடிப்பட்ட நிலையில் கீழே விழுந்துகிடந்தார். அவரை மீட்ட பொதுமக்கள், மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணையில், உயிரிழந்த வாலிபர் ஒடிசா மாநிலம், ஜித்தா பாஹல் சாஹூ, 42, என்பதும், ஆண்டிபாளையத்தில் ஒரு செங்கல் சூளையில் பணிபுரிந்ததும் தெரிந்தது. சொந்த ஊர் செல்ல ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தபோது இவர், எதிரே நின்றிருந்த குன்னத்துாரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரூபன், 22 மீது உரசியுள்ளார்.இதனால், வாக்குவாதம் முற்றியதில், ரூபன், ஜித்தா பாஹல் சாஹூவை கீழே தள்ளி விட்டதில், பலத்த காயமடைந்து, உயிரிழந்தது தெரிந்தது. இதனால், ரூபனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ