உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முழுமையாக மூடப்பட்ட நீர் வழித்தடம் :தடுக்க வேண்டிய அதிகாரிகள் மெத்தனம்

முழுமையாக மூடப்பட்ட நீர் வழித்தடம் :தடுக்க வேண்டிய அதிகாரிகள் மெத்தனம்

பல்லடம்:பல்லடம் அருகே, அதிகாரிகளின் மெத்தனப் போக்கு காரணமாக, நீர் வழித்தடம் ஒன்று ஆக்கிரமிப்பாளர்களால் முழுமையாக மூடப்பட்டு வருகிறது.பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகர், தொட்டியப்புச்சி கோவில், ஆறுமுத்தாம்பாளையம் வழியாக செல்லும் நீர் வழித்தடம், நொய்யலை சென்றடைகிறது.சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளம் குட்டைகளுக்கு நீர் ஆதாரமாக உள்ள இந்த நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பாளர்களால் முழுமையாக மூடப்பட்டு வருகிறது.இப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:காளிவேலம்பட்டி, மாணிக்காபுரம், வேலம்பாளையம், உள்ளிட்ட பல கிராமங்கள் வழியாக வரும் நீர் வழித்தடம் அறிவொளி நகர், ஆறுமுத்தாம்பாளையம் வழியாக நொய்யல் நதியை சென்றடைகிறது.முன்பு, பருவ மலைகளின் போது, இந்த நீர் வழித்தடம் வழியாக மழை நீர் நிரம்பி வழிந்து சென்றுள்ளது. பின்னாளில், ஆக்கிரமிப்புகள் காரணமாகவும், குப்பைகள் கொட்டப்பட்டும் நீர் வழித்தடம் சுருங்கி விட்டது. தற்போது, தனியார் சிலர், நீர் வழித்தடத்தை முழுமையாக கபளீகரம் செய்து வருகின்றனர். சமீபத்தில், நீர்வழித்தடத்தின் மீது கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி, தனியார் மூலம் கல், மண் கொண்டு மூடப்பட்டுள்ளது.நீர் வழித்தடத்தின் பல்வேறு பகுதிகளும் இதேபோல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், பருவ மழையின் போது தண்ணீர் ஓட்டம் தடைபட்டு, மழைநீர் சேகரிப்பு பாதிக்கப்பட்டு நீர் ஆதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.கோர்ட் சொல்லியும் கேட்பதாக இல்லைநீர்நிலைகளை மீட்டெடுக்க வேண்டும் என, ஐகோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதனை அதிகாரிகள் முறையாக பின்பற்றாததால், ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. நீர் வழித்தடம் முழுமையாக மூடப்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமாக தெரிந்தும், அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் உள்ளனர். இதே நிலை நீடித்தால், பின்னாளில், நீர் வழித்தடம் என்று ஒன்று இருந்ததே தெரியாத நிலை ஏற்பட்டு விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ