மாதம் ஒரு முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி
உடுமலை:குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி மேல்நிலைப்பள்ளியில், மாதம் ஒரு முன்னாள் மாணவரின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளியில், மாதந்தோறும் ஒரு நாள் அப்பள்ளியின் முன்னாள் மாணவர்களை அழைத்து மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடக்கிறது.இதன் அடிப்படையில் செப்., மாத முன்னாள் மாணவர் சிறப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. விழாவில், பள்ளி தலைமையாசிரியர் ஞானசேகரன் தலைமை வகித்தார். தமிழாசிரியர் நாச்சிமுத்து வரவேற்றார்.பள்ளிக்குழு உறுப்பினர் ஜூலியா முன்னிலை வகித்தார். பள்ளி முன்னாள் மாணவரும், உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் பங்கேற்று மாணவர்களுக்கு, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் குறித்தும், அறிவியல் தொடர்பான உயர்கல்வி குறித்தும், நுழைவு தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்வது பற்றியும் விளக்கமளித்தார்.தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கணித ஆசிரியர் ரவிக்குமார் நன்றி தெரிவித்தார்.